மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் கோலாகலம்
26-Dec-2025
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நள்ளிரவு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.ஆங்கில புத்தாண்டை ஒட்டி வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். சர்ச்களில், நேற்றிரவு, 11:00 மணி முதல், 12.00 வரை ஆராதனை நடத்தப்பட்டது. கடந்தாண்டு முழுக்க இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆராதனை நடத்தப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது. குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமானோர் திருப்பலியில் பங்கேற்றனர்; இன்று காலையும், திருப்பலி நடத்தப்படும். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. திருப்பூர் குமரன் ரோடு கேத்தரீனம்மாள் சர்ச், குமார் நகர், புனித ஜோசப் சர்ச், பூமலுார் புனித அந்தோணியார் சர்ச், பல்லடம் புனித வேளாங்கண்ணி சர்ச், அவிநாசி புனித தோமையார் சர்ச், லுார்துபுரம் அன்னை சர்ச், குமார் நகர் புனித பால் சர்ச், நல்லுார் யூக்கரிஸ்ட் சர்ச், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, டி.இ.எல்.சி., சர்ச் உட்பட அனைத்து கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., மற்றும் பிற சபை சார்ந்த தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது.
26-Dec-2025