உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறந்த ஊழியர் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை

இறந்த ஊழியர் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை

பல்லடம் : உடுமலையை சேர்ந்தவர் கவியழகன், 37. பொங்கலுாரை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன், 52. வெள்ளகோவிலை சேர்ந்தவர் வீரம்மாள் 63. மூவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். இ.எஸ்.ஐ., பயனாளிகளான முவரும், பணியின்போது உயிரிழந்தனர்.கவியழகன் குடும்பத்தினருக்கு, 1,31,840 ரூபாய் உதவித்தொகை மற்றும் மாதந்தோறும், 7,680 ரூபாய் வழங்கும் மாதாந்திர உதவித்தொகை;சமுத்திரபாண்டியன் குடும்பத்தினருக்கு, 1,39,020 ரூபாய் உதவித்தொகை மற்றும் 12,600 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை; வீரம்மாள் குடும்பத்தினருக்கு, 15,680 ரூபாய் உதவித்தொகை மற்றும் 5,880 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை, துணை இயக்குனர்கள் ரவிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை