உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் தொழிலாளருக்கு இ.எஸ்.ஐ., திட்டம்; தொழிற்சங்க கூட்டுக்குழு வலியுறுத்தல்

பனியன் தொழிலாளருக்கு இ.எஸ்.ஐ., திட்டம்; தொழிற்சங்க கூட்டுக்குழு வலியுறுத்தல்

திருப்பூர் ; அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டம், பி.என்.,ரோடு ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தில் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., பொது செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யு., பனியன் சங்க செயலாளர் சம்பத், ஏ.ஐ.டி.யு.சி., சங்க செயலாளர் செந்தில்குமார், எல்.பி.எப்., சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் பூபதி பங்கேற்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.,), முத்துசாமி (எச்.எம்.எஸ்.,), மனோகரன் மற்றும் சம்பத் (எம்.எல்.எப்.,), கண்ண பிரான் (ஏ.டி.பி.,)சீனிவாசன் ( பி.எம்.எஸ்.,) ஆகியோர் பேசினர்.திருமுருகன்பூண்டி ரிங்ரோட்டில் கட்டி திறக்கப்பட்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனையை, முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். போதிய டாக்டர் மற்றும் பணியாளர்களை நியமித்து, மருத்துவ வசதிகளை கொண்டுவர வேண்டும்.இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மூன்று கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது; ஆட்டோவில் சென்றால், 300 ரூபாய் செலவாகிறது. இத்தகைய சிரமத்தை குறைக்க, இ.எஸ்.ஐ. மருத்துவமனை வழியாக கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.மருத்துவமனை அருகே சாக்கடை நீர் தேங்கியுள்ளது; நோயாளிகளுக்கு மட்டுமல்ல, டாக்டர்களுக்கும் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. சாக்கடை கழிவுநீரை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை விழிப்புணர்வு

திருப்பூரில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பனியன் தொழிலில் உள்ளனர்; அவர்களில், குறைவானவர்கள் மட்டுமே, இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைந்துள்ளனர். திருப்பூரில் 20க்கும் அதிகமான தொழிலாளர் பணியாற்றும் நிறுவனங்களில், இ.எஸ்.ஐ., பதிவை கட்டாயமாக்கப்பட வேண்டும்.தொழிற்சாலை ஆய்வாளர்கள், இ.எஸ்.ஐ., அதிகாரிகள் கூட்டாய்வு நடத்தி, தகுதியான தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., திட்டத்தில் உறுப்பினராக இணைக்க வேண்டும். இக்கோரிக்கையை ஒரு மாதகாலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில், போராட்டம் நடத்தப்படுமென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை