உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுரை போட்டி மாணவர் ஆர்வம்

கட்டுரை போட்டி மாணவர் ஆர்வம்

திருப்பூர், ; திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் அலகு-2 சார்பில், கல்லுாரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். போதையில்லா தமிழகத்தை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் தொடர்பாக, மாணவ, மாணவியர் கட்டுரை எழுதினர். சிறப்பாக கட்டுரை எழுதிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் சக்தி செல்வம், சத்யா மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை