மேலும் செய்திகள்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
23-Oct-2024
வெள்ளகோவில், மூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் குமரவடிவேல், 56. கேரளா, தலசேரி என்ற இடத்தில் பல ஆண்டு காலமாக குடும்பத்துடன் தங்கி, பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சில நாட்கள் முன் தலசேரி அருகே வாகன விபத்தில் இறந்து மூளைச்சாவு அடைந்து, இரு நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில், குமரவடிவேலுவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து உடல் உறுப்புகளை தானம் செய்தனர். நேற்று தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ்ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் ஆகியோர், குமரவடிவேலுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் முன்னிலையில், அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையத்தில் உடலை தகனம் செய்தனர்.
23-Oct-2024