| ADDED : நவ 18, 2025 04:11 AM
திருப்பூர்: திருப்பூர், வஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் பழைய குற்றவாளிகள் பதுங்கியுள்ளனரா என்று துணை கமிஷனர் தலைமையில் போலீஸ் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வஞ்சி நகர், அய்யம்பாளையத்தில் உள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்பு பகுதியில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள், அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு, மக்களை அச்சுறுத்தும் சிலர் பதுங்கியிருப்பதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கமிஷனர் உத்தரவின் பேரில், தெற்கு துணை கமிஷனர் தீபா சத்யன் தலைமையில், நல்லுார் உதவி கமிஷனர் தையல் நாயகி, இன்ஸ்பெக்டர்கள் மீனாகுமாரி, பாலமுருகன் உட்பட, 20 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் குடியிருப்பு பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். வழக்கில் தொடர்புடைய நபர்கள் பதுங்கியுள்ளனரா என்று விசாரித்தனர். சந்தேகப்படும் நபர்கள் குறித்து தெரிந்தால், தகவல் கொடுக்க மக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.