மேலும் செய்திகள்
ஆதார் முகாமில் 400 பேர் பயன்
20-Sep-2025
காங்கேயம்;பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுவதும் கட்சியினர் சேவை வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் முத்துாரில், பா.ஜ., இளைஞரணி சார்பில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள மாநில இளைஞரணி தலைவர் சூர்யா, கோவையிலிருந்து வந்தார். அவரை வரவேற்க காங்கேயத்தில் கட்சி நிர்வாகிகள், 12:30 மணியளவில் மேள, தாளங்களுடன் காத்திருந்தனர். ஆனால் நிர்வாகிகளை சந்திக்காமல் புறக்கணித்து விட்டு முத்துார் சென்று விட்டாராம். இதனால் இரண்டு மணி நேரமாக வரவேற்க காத்திருந்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்த தகவல் செல்லவே, முத்துார் நிகழ்ச்சியை முடித்து விட்டு காங்கேயம் வந்த சூர்யா, சில கட்சி நிர்வாகிகளை சந்தித்து சென்றுள்ளார். கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலே இதற்கு காரணம் என்றும், காங்கேயம் மூத்த பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
20-Sep-2025