உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சோலார் நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு

சோலார் நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு

பல்லடம்; சோலார் நெட்வொர்க் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை பின்பற்ற மின்வாரியம் மறுத்து வருவது, தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், மின் கட்டண சுமையிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் எனும் நோக்கில் தொழில்துறையினர் பலர், சோலார் மின் உற்பத்தியை நாடுகின்றனர்.சோலார் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, சோலார் நெட்வொர்க் கட்டணம் விதிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இடியாக இறங்கியது. இதன் காரணமாக, புதிதாக சோலார் மின் உற்பத்தியை பயன்படுத்த நினைக்கும் தொழில் துறையினர் பலரும் அதிலிருந்து பின்வாங்குகின்றனர்.தொழில் துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இது குறித்து விசாரித்த ஐகோர்ட், கடந்த ஆண்டு, சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.இது குறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:சோலார் பயன்படுத்தும் அனைவருக்கும் கோர்ட் உத்தரவு பொருந்தாது என்றும், கோரிக்கைக்கு ஏற்ப நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு அளிக்கலாம் எனவும், தமிழக அரசு, நிதித்துறை மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பியது.இதன்படி, மின்வாரியத்தில் கோரிக்கை வைத்தால், 'யார் கோர்ட்டுக்கு சென்று உத்தரவு பெற்று வந்தார்களோ, அந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்,' என்கின்றனர்.கோர்ட் உத்தரவு என்பது, பொதுவாக விதிக்கப்படுவது. ஆனால், மனு தாக்கல் செய்தவர்களுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்பது வேடிக்கையாக உள்ளது. மின் கட்டண சுமையிலிருந்து தப்பிக்க, சோலார் பயன்படுத்துபவர்களை இது வஞ்சிப்பதாக உள்ளது.கோர்ட் உத்தரவை முறையாக பின்பற்றி, சோலார் உற்பத்தி மேற்கொண்டு வரும் தொழில் துறையினர் அனைவருக்கும் நெட்வொர்க் கட்டணத் திலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி