மேலும் செய்திகள்
'சைமா' சங்க நிர்வாகிகள் 29ல் பதவியேற்பு
25-Sep-2025
திருப்பூர்:திருப்பூர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாக குழு பொறுப்பேற்ற பின்னர் அதன் முதல் செயற்குழு கூட்டம் நேற்று சங்க அரங்கில் நடைபெற்றது. தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசினார். செயலாளர் தாமோதரன், பொருளாளர் சுரேஷ்குமார், துணை தலைவர் பாலச்சந்தர், இணை செயலாளர் தனபால் மற்றும் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திருப்பூர் மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பது, சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மேற்கொள்வது, இந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (போமா கோல்கட்டா) துணை தலைவராக சண்முகசுந்தரம், இணைச் செயலாளராக சசி பிரகாஷ் அகர்வாலா ஆகியோரை 'சைமா' சார்பில் நியமனம் செய்ய பரிந்துரைப்பது. எம்.எஸ்.எம்.இ. சட்டத்தில் உள்ள சிரமம் மற்றும் சிறப்புகள் குறித்து அனுபவமிக்க ஆலோசகரை நியமிப்பது, 'சைமா' சங்கம் அனைத்து மாநிலங்களிலும் கண்காட்சிகள் அமைப்பது; சங்கத்தின் வளர்ச்சிக்காக மூன்று புதிய கமிட்டிகள் அமைப்பது; சங்கத்தின் முன்னாள் தலைவர் வைகிங் ஈஸ்வரன் கவுரவ தலைவராகவும் முன்னாள் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் சிறப்பு ஆலோசகராகவும் நியமிப்பது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
25-Sep-2025