உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

உடுமலை; உடுமலை ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றிய அலுவலகம் தளி ரோடு மேம்பாலம் அருகில் அமைந்துள்ளது. ஒன்றிய அலுவலக பழைய கட்டடம் சராசரியாக 60 ஆண்டுகளையும் கடந்து விட்டதால், புதிய கட்டடம் கட்டுவதற்கு வலியுறுத்தப்பட்டது.இது தவிர, பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பயனாளிகள் வந்து செல்வதற்கு காத்திருப்பதற்கும் இடப்பற்றாக்குறை, கூட்டம், பயிற்சி நடத்துவதற்கான போதிய இடம் இல்லாததால், கூடுதல் வசதியுடன் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிய ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு, 5 கோடி 90 லட்சம் ரூபாயும், பழைய அலுவலகத்தை அப்புறப்படுத்துவதற்கு 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன் அடுத்தகட்டமாக, உடுமலை ஒன்றிய நிர்வாக அலுவலகம் நகராட்சி பழைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது. பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது.தற்போது நகராட்சி அலுவலக கட்டடத்தில் செயல்படும் ஒன்றிய அலுவலகத்திற்கு கிராம மக்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் அருகே பஸ் ஸ்டாப் இல்லாததால் சிறிது துாரம் செல்ல வேண்டும்.பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதற்கு, முதியவர்கள் தற்காலிக அலுவலகத்துக்கு வர தயங்குகின்றனர். பழைய அலுவலகம் அருகில் பஸ் ஸ்டாப் இருப்பதால் எளிதில் சென்று வந்தனர்.புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணிகளை, விரைவில் நிறைவு செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !