உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

உடுமலை; உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதையில் உடுமலை அமைந்துள்ளது. உடுமலை வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் பல்வேறு நகரங்களுக்கு ஏராளமான பயணியர் செல்கின்றனர். பண்டிகை, விடுமுறை நாட்களில் தற்போது செல்லும் ரயில்கள் பயணியருக்கு போதுமானதாக இல்லை. இதனால், இந்த ரயில்களில் அமர இடமின்றியும், நின்று கொண்டும் பயணியர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கோவை, பாலக்காட்டிலிருந்து, ராமேஸ்வரம், துாத்துக்குடி, கேரள மாநிலம் கொல்லத்திற்கு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை