அறங்காவலர் குழு தலைவருக்கு ஏற்றுமதியாளர் பாராட்டு
திருப்பூர்; பழநி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியனுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் பாராட்டு விழா நடந்தது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பழநி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ளார். சங்க அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவுக்கு, சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் இளங்கோவன், பொது செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார் துரைசாமி உள்ளிட்டோர் பேசினர். 'ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்' சந்திரன், 'டாலர் இன்டஸ்ட்ரீஸ்' தலைவர் பாலசுப்பிரமணியம் உட்பட சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், பழநி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவரை பாராட்டி பேசினர்.