உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடன் திருப்பிச்செலுத்த அவகாசம் தேவை; வங்கிகளிடம் ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்

கடன் திருப்பிச்செலுத்த அவகாசம் தேவை; வங்கிகளிடம் ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்

திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் 'பாங்க் ஆப் இந்தியா' அதிகாரிகளுடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று, ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடந்தது. ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது: திருப்பூர் தொழில்துறையில், 90 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. பெரும்பாலும், வங்கி கடனுதவியை சார்ந்து இயங்கி வருகின்றன. ஏற்றுமதியாளர்கள், பல்வேறு சவால்களை தற்போது சந்தித்து வருவதால், கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும். சந்தையை விரிவுபடுத்த போதிய மானிய உதவி, வட்டி மானிய நிவாரணம் போன்ற உதவிகளை வழங்க வேண்டும். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், வர்த்தக ஒப்பந்தத்தால், புதிய வளர்ச்சி கிடைக்கும். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வரி உயர்வை சமாளிக்க, வங்கிகள் சரியான வகையில் உதவிட வேண்டும். திருப்பூரில் வங்கிகள் வளர்ச்சி பெறுவது போல், ஏற்றுமதி நிறுவனங்களும் வளர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். வங்கி பொதுமேலாளர் உண்ணிகிருஷ்ணன் பேசுகையில், ''திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 2030ம் ஆண்டுக்குள், ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய, 'பாங்க் ஆப் இந்தியா' தனது முழுமையான ஆதரவை வழங்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ