உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அம்பலமான ஸ்திரத்தன்மை

அம்பலமான ஸ்திரத்தன்மை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சேமிப்பு கிடங்கு கட்டடம், பல்லடம் அருகே நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில் கட்டப்பட்டு, இரண்டு ஆண்டுக்கு முன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கிடங்கு மேற்கூரையில், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, செங்கற்கள் வெளியே தெரிகின்றன. சேமிப்புக் கிடங்கு பயன்பாட்டுக்கு வந்த இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில், அதன் ஸ்திரத்தன்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !