உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் பரிசோதனை முகாம்; 95 டிரைவர்கள் பங்கேற்பு

கண் பரிசோதனை முகாம்; 95 டிரைவர்கள் பங்கேற்பு

திருப்பூர்; சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு திருப்பூரில் நடந்த கண் பரிசோதனை முகாமில் ஆட்டோ டிரைவர், 95 பேர் பங்கேற்றனர்.சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நோட்டீஸ் வழங்கல், விழிப்புணர்வு நாடகம், கருத்தரங்கம் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.அவ்வகையில், கே.வி.ஆர்., நகர் போக்குவரத்து போலீசார், லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், கண் பரிசோதனை முகாம் திருப்பூர் காவேரி மஹாலில் நேற்று நடந்தது. போக்குவரத்து உதவி கமிஷனர் சுப்புராம், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவ முகாமில், 95 ஆட்டோ டிரைவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.அதில், 23 பேருக்கு கண் கண்ணாடி போடவும், இருவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யவும், ஒருவருக்கு கண் தசை வளர்ச்சி கண்டறியப்பட்டு சிகிச்சைக்கும் பரிந்துரைத்தனர்.n காங்கயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமேரி முன்னிலையில் காங்கயம் பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை கூத்துப்பட்டறையை சேர்ந்த கலைஞர்கள் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஒத்திகை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !