சந்தையில் போலி விவசாயிகள்; கலெக்டரிடம் சங்கத்தினர் மனு
திருப்பூர்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க உழவர் சந்தைகள் பாதுகாப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய மனு: திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில், விவசாயிகள் போர்வையில், போலி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஊடுருவி வியாபாரம் செய்வதால், உழவர் சந்தை விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் காக்க உருவாக்கப்பட்ட உழவர் சந்தையின் செயல்பாடு, அதிகாரிகளின் செயல்பாடுகளால் போலி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். எனவே, உரிய கள ஆய்வு செய்து, உழவர் சந்தையில் போலி விவசாயிகள் ஊடுருவியிருப்பின், அவர்களது உழவர் அட்டையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.