உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

உடுமலை; உடுமலை அருகேயுள்ள ஜிலேபிநாயக்கன்பாளையம், உடையார்தோட்டத்தை சேர்ந்த சிவராஜ், 45. விவசாயி. நேற்று முன்தினம் இரவு, தோட்டத்திலிருந்து, பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது, ரோட்டின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி கூட்டம் வாகனத்தில் மோதியது.இதில், கீழே விழுந்த அவரை, காட்டுப்பன்றிகள் தாக்கி பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.காட்டுப்பன்றிகளால், பயிர்கள் பாதித்து வரும் நிலையில், விவசாயிகள், கிராம மக்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ