தட்கல் திட்டம் இழுத்தடிப்பு விவசாயிகள் ஆவேசம்
பொங்கலுார் : 'தட்கல்' திட்டத்தில், இமின் இணைப்பு பெற இழுத்தடிப்பு செய்வதாக கூறி, போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.தட்கல், சுயநிதி திட்டம், இலவசம் என்ற மூன்று பிரிவின் கீழ் விவசாயத்திற்கும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இலவசப் பிரிவில் மின் இணைப்பு வேண்டி பதிவு செய்து, 15 ஆண்டுகளுக்கும் மேலான விவசாயிகள் கூட இன்னும் காத்திருக்கின்றனர். தட்கல் பிரிவில் பணம் கட்டிய விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் பணம் கட்டிய விவசாயிகளுக்கு கூட வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர். எனவே இதை கண்டித்து பெருந்தொழுவு மின்வாரிய அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகளை அணி திரட்டும் பணியில் பிற விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.