உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதை வெங்காயம் கொள்முதல்; விவசாயிகள் தீவிரம்

விதை வெங்காயம் கொள்முதல்; விவசாயிகள் தீவிரம்

பொங்கலுார், ; தென்மேற்கு பருவக்காற்று வீசத் துவங்கியுள்ளது. இது வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் சூழலை ஏற்படுத்தும். விரைவில் அக்னி நட்சத்திரம் முடிய உள்ளதாலும், கோடை மழை பெய்யத் துவங்கி இருப்பதாலும் காலநிலையில் மாற்றம் ஏற்படும். இது வெங்காயம் நடவு செய்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும்.எனவே, விவசாயிகள் நிலத்தை உழுது, தொழு உரம் இட்டு நிலத்தை தயார்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு பின் வெங்காய நடவு தீவிரமாகும் என்பதால் முன்கூட்டியே விதை வெங்காயம் கொள்முதல் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.நமது மாவட்டத்தில் விளைந்த வெங்காயத்தை தவிர்த்து, திருச்சி, துறையூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று விதை வெங்காயம் கொள்முதல் செய்து வருகின்றனர்.தற்பொழுது ஒரு கிலோ விதை வெங்காயம் அதிகபட்சமாக கிலோ, 47 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.விரைவில் அறுவடை சீசன் முடிய உள்ளதால் புதிய வெங்காய வரத்து குறையும். மேலும் பல விவசாயிகள் வைகாசி பட்டத்தில் நடவு செய்ய உள்ளதால் விதை வெங்காயத்திற்கான தேவை அதிகரிக்கும்.எனவே விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்ப்பதற்காகவே விவசாயிகள் முன்கூட்டியே விதை வெங்காயம் கொள்முதல் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ