உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி.,-ல் மலைக்க வைத்த குப்பை அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்

பி.ஏ.பி.,-ல் மலைக்க வைத்த குப்பை அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள்

பொங்கலுார்:பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீருக்குப் பதிலாக குப்பை வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, ஆக., 18ல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு நாளாக பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் பயணித்த தண்ணீர் நேற்று காங்கயம் அருகே 'ஜீரோ பாயின்ட்' - ஐ சென்றடைந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின் வாய்க்காலில் தண்ணீர் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர்.வாய்க்காலில் தண்ணீரை விட குப்பைகளே அதிக அளவில் வந்ததை பார்த்து, விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். வாய்க்காலில் தண்ணீர் செல்வதை குப்பைகள் தடுத்ததால், 'ஜீரோ பாயின்ட்'-ல் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை.ஒரு கி.மீ., நீளத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அந்தக் குப்பைகளில் காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், டையாபர்கள் கோழிக்கழிவுகள் நிறைந்திருந்தது. விவசாயிகள் இரண்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு குப்பைகளை மணிக்கணக்கில் அகற்றினர். அதன்பின்னரே, தண்ணீர் காங்கயம் வாய்க்காலில் சென்றது. தண்ணீர் தங்கள் பகுதி வாய்க்காலுக்கு வந்ததை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

வாய்க்காலில் குப்பை எப்படி?

பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் பொங்கலுார், வாவிபாளையம், ஆண்டிபாளையம் உட்பட பகுதிகளில் குப்பைகள் வாய்க்காலில் கொட்டப்படுகின்றன. ஊராட்சி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் குப்பை கொட்டுவதை தவிர்க்க முடியும்.ஆனால், ஓட்டு போய்விடும் என்பதால் ஊராட்சிகள் கண்டு கொள்வதில்லை. பி.ஏ.பி.,வாய்க்கால் திறந்த வெளி 'பாராக' மாறிவிட்டது. அதனை கட்டுப்படுத்த போலீசாரோ, வருவாய் துறையினரோ நடவடிக்கை எடுப்பதில்லை. மது பிரியர்கள் மூலம் குப்பை, காலி மது பாட்டில்கள் ஏராளமான அளவில் வீசப்படுகின்றன. சுல்தான்பேட்டை பகுதிகளில் கோழிக்கழிவுகள் மலை போல் குவிக்கப்படுகின்றன. இதுவே, நீரோட்டத்தை தடுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gajageswari
ஆக 22, 2024 05:26

இந்த கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் நல்ல அதிநவீன சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு போராட்டம்.


VENKATASUBRAMANIAN
ஆக 21, 2024 08:55

மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. பொது இடங்களில் குப்பை போடுவது எச்சில் துப்புவது கழிப்பிடங்கள் ஆக செய்வது இது போன்றவை முக்கிய காரணம். இதற்கு போதுமான பொது அறிவு இல்லை. சில இடங்களில் படித்தவர்களே இதை செய்கிறார்கள்.


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 08:54

ஒரு கட்சி செம்மொழி என்று மாநாட்டை நடத்தியது , அதன்பின்னர் குப்பைகூளமாகி போனது அந்த நகரம் , மற்றொரு கட்சி தங்களது மாநாட்டை நடத்தி அதன் தொண்டர்கள் குப்பையை தாங்களே அள்ளி முன்னுதாரணமாக திகழ்ந்தனர் , முதலாவது கட்சிக்கு ஆட்சி அளித்து மகிழ்ந்தனர் தமிழக மக்கள் , இரண்டாவது கட்சியின் தொண்டர்களை நினைத்து வேதனை அடைந்தேன்


நிக்கோல்தாம்சன்
ஆக 21, 2024 08:55

டாஸ்மாக் நல்ல டாஸ்மாக் என்று புரட்சித்தலைவர் பாணியில் பாடுகிறார் ஓமகுச்சியார்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை