உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர்களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு விவசாயிகள் புகார்

பயிர்களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு விவசாயிகள் புகார்

உடுமலை; உடுமலை பகுதிகளிலுள்ள கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்படாததால், தனியார் நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது, என விவசாயிகள் தெரிவித்தனர்.உடுமலையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 60 சதவீதம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தென்னையை வெள்ளை, ஈரியோபைடு, கேரளா வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், வேர்ப்புழு, கணுப்புழு தாக்குதல் என பல்வேறு நோய்கள் தாக்கி வருகின்றன.மகசூல் பெருமளவு குறைந்து, விவசாயிகள் பாதித்து வருகின்றனர். தென்னை சாகுபடியை காக்க, ஒருங்கிணைந்த ஆய்வு மற்றும் நடவடிக்கை தேவை.தென்னைக்கு ரசாயன உரங்களான, பொட்டாஷ், சூப்பர்பாஸ்பேட், யூரியா ஆகியவற்றை, மரத்துக்கு, 9 கிலோ என, ரூ. 350 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. ஆனால், இப்கோ 10-26-26 உரத்தை, 3 கிலோ, மரத்திற்கு இட்டால், ரூ.150 மட்டுமே செலவாகும்.ஆனால், கூட்டுறவு சங்கங்களில், இப்கோ உரம் இருப்பு இல்லை. தனியாரிடம் கூடுதல் விலை கொடுத்து, தேவையில்லாத உரங்களை வாங்கினால் மட்டுமே தருகின்றனர்.தேவையான அளவு உரம், கிராமங்களிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும். நோய்த்தாக்குதல் மருந்துகள், நுண்ணுாட்டங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும்.தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளால், நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கிறது. வீரியம் மிக்க ரசாயனங்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்.கிராமங்களிலுள்ள கால்நடைகள் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்பிலுள்ள கால்நடைகளுக்கு, தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.புதுப்பாளையம், அடிவள்ளி கிராமத்திலுள்ள வீடுகள், தவறுதலாக, நீர் நிலை புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. பல நுாறு ஆண்டுகளாக வசிக்கும் கிராம மக்கள், நில பரிவர்த்தனை, கடன் பெறுவதில் சிக்கல் உள்ளது. இதனை நீக்க வேண்டும்.இவ்வாறு, பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !