உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்கணும் விவசாயிகள் கோரிக்கை

வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்கணும் விவசாயிகள் கோரிக்கை

உடுமலை: உடுமலை போடிபட்டியில் வாரசந்தை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஒன்றியத்தில், போடிபட்டியில், வாரம்தோறும் புதன்கிழமைகளில், அருகிலுள்ள கிராமங்களிலிருந்து, வியாபாரிகள் காய்கறிகளை சந்தைபடுத்துகின்றனர்.சந்தை நடத்த முறையான அனுமதியில்லாததால், போடிபட்டி பஸ் ஸ்டாப் அருகிலுள்ள திறந்த வெளியில் காய்களை சந்தைப்படுத்துகின்றனர். அவற்றை பராமரிப்பதற்கும் எந்த வசதியும் இல்லை.ஒன்றியத்தில் வாளவாடி மட்டுமே, முறையான அனுமதி பெற்ற சந்தையாக நடக்கிறது. இச்சந்தை வளாகம், பராமரிப்பில்லாமலும், திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் மாறியிருப்பதால், அதை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.அனுமதியில்லாவிட்டாலும், போடிபட்டியில் நடக்கும் வாரசந்தைக்கு, சுற்றுப்பகுதி பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர்.சந்தையை முறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, போடிபட்டியில் நடக்கும் சந்தையை முறைப்படுத்த, அனுமதி வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.கருத்துரு அனுப்பி சில ஆண்டுகள் ஆன நிலையிலும், மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில், தற்போது போடிபட்டியில் நடக்கும் வாரசந்தை குறித்து, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்தில் விபரங்களை சேகரித்துள்ளது.கடைகளின் எண்ணிக்கை, சந்தை நடக்கும் இடம் குறித்தும் ஊராட்சி நிர்வாகத்தினர் விபரங்களை பதிவு செய்துள்ளனர்.சந்தை நடத்துவதற்கு, விரைவில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி