குளங்களை துார்வார விவசாயிகள் கோரிக்கை
உடுமலை; குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, நீர்நிலைகளில் சீமைகருவேல மரங்களை அகற்றி,குளங்களை துார்வார வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.இது குறித்து கிஷான் மோக்ஷா, மாநில செயலாளர் மவுனகுருசாமி திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு:குடிமங்கலம் ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக, குளம் மற்றும் மழை நீர் ஓடைகள் மட்டுமே உள்ளன. கோடை மழை பெய்யாத நிலையில், கிராமங்களிலுள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன.இத்தருணத்தில், குளங்களை துார்வார வேண்டும். இப்பணிகளுக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்தலாம்.நீர் வரத்து கால்வாய்கள் மற்றும் கரைகளை வலுப்படுத்தினால், தென்மேற்கு பருவமழை காலத்தில், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கும். மேலும், உப்பாறு ஓடை உள்ளிட்ட நீராதாரங்களில் சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.இம்மரங்களை அகற்ற வேண்டும். ஓடைகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.