உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளி செடிகளை அழிக்கும் விவசாயிகள்

தக்காளி செடிகளை அழிக்கும் விவசாயிகள்

பொங்கலூர் : தக்காளி விலை அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. பறிப்பு கூலி, வேன் வாடகைக்கு கூட கட்டுப்படி ஆகாததால் பல விவசாயிகள் தக்காளிச் செடிகளை உழவு ஓட்டி அழித்து வருகின்றனர். அவ்வகையில், நேற்று குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி, 3 ஏக்கரில் பயிரிட்ட தக்காளியை டிராக்டர் ஓட்டி அழித்தார். இவ்வாறு ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வாக உள்ளது. கார்த்திகைப் பட்டத்தில் வழக்கமாக தக்காளி சாகுபடி அதிகரிக்கும் என்பதால் மாற்று பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இப்பிரச்னை ஏற்படாது. பருப்பு, எண்ணெய் வித்துக்கள் போன்றவை பெரும்பாலும் இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் சாகுபடி செய்யாததற்கு காரணம் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதே காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை