குப்பை கொட்டினால் அபராதம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கேரளாவில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. கேரளாவில் குப்பைகளை குறைக்க 'குப்பையில்லா நவ கேரளா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குப்பை கொட்டுபவர்கள் குறித்து வாட்ஸாப் எண்ணில் மக்கள் ஆதாரங்களுடன் புகார் அளிக்கின்றனர். புகார் அளிப்பவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு 11.01 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், கேரளாவில் குப்பை பிரச்னை கட்டுக்குள் உள்ளது. அதேபோல தமிழகத்திலும் குப்பை கொட்டுபவருக்கு எதிராக அபராதம் விதிக்கும் நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.