மேலும் செய்திகள்
கொண்டைக்கடலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்யுங்க
05-Dec-2024
உடுமலை; நடப்பு சீசனில் விலை வீழ்ச்சியை தவிர்க்க, உளுந்து தானியத்தை அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என, உடுமலை வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிராகவும், தானிய தேவைக்காகவும், உளுந்து பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.அமராவதி ஆயக்கட்டு பாசன பகுதியில், நெல் அறுவடைக்குப்பிறகு, வயல்களில் உளுந்து விதைக்கின்றனர். பிற பகுதிகளில், பருவமழை சீசனில் மானாவாரியாகவும் உளுந்து சாகுபடியாகிறது.இச்சாகுபடிக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மானியமும் வழங்கப்பட்டது. உளுந்து சாகுபடி பரப்பு அதிகரிக்கஅதிக முக்கியத்துவம் அளித்தாலும், அறுவடை சமயங்களில் போதிய விலை கிடைப்பதில்லை.இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உளுந்து சாகுபடியை கைவிட்டு, மாற்றுச்சாகுபடிக்கு சென்றனர்.இதைத்தடுக்க, மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு வாயிலாக, குறைந்தபட்ச ஆதரவு விலையில், உளுந்து கொள்முதல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.கடந்தாண்டு, 130 டன் வரை திருப்பூர் மாவட்டத்தில், உளுந்து நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.நடப்பு சீசனில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை வட்டாரத்தில் பரவலாக உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நடப்பு சீசனிலும், ஆதார விலை திட்டத்தின் கீழ், அரசு நேரடியாக உளுந்து கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
05-Dec-2024