உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடத்தில் 18 மி.மீ. மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் 18 மி.மீ. மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவில், நேற்று பல்லடத்தில், 18 மி.மீ. மழை பதிவானது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்ட அளவிலான மழைப்பதிவு விவரத்தை வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூரிலும் பல இடங்களில் மழைபெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, திருப்பூர் வடக்கு பகுதியில், 5 மி.மீ, தெற்குபகுதியில், ஒரு மி.மீ, கலெக்டர் அலுவலக வளாக பகுதியில், ஒரு மி.மீ., அவிநாசி வட்டாரத்தில், 9 மி.மீ, ஊத்துக்குளி வட்டாரத்தில், 11 மி.மீ, பல்லடம் வட்டாரத்தில், 18 மி.மீ, குண்டடத்தில் 10 மி.மீ, உட்பட மொத்தம் திருப்பூரில் 60 மி.மீ மழை பதிவானது. அவ்வகையில், சராசரியாக 3 மி.மீ மழை பதிவானதாக, வருவாய்த்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை