உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செடி அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

செடி அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

உடுமலை; செடி அவரை சாகுபடிக்கு குறைந்த செலவு ஏற்படுவதால், அச்சாகுபடியில் ஈடுபட உடுமலை விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.உடுமலை, ஒட்டன்சத்திரம் சந்தைகள், காய்கறி வர்த்தகத்தில், முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கிணற்று பாசனத்தில், சுழற்சி முறையில் காய்கறி சாகுபடி செய்ய சுற்றுப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.தற்போது, உடுமலை பகுதியில் பரவலாக செடி அவரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பண்டிகை சீசனில் அனைத்து சந்தைகளிலும் அவரைக்கு நல்ல விலை கிடைக்கிறது. பருவமழைக்கு பிறகு, அறுவடைக்கு தயாராகும் வகையில், திட்டமிட்டு நடவு செய்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:அவரையில், பட்டை, குட்டை, சிவப்பு நெட்டை உள்ளிட்ட பல ரகங்கள் உள்ளன. இப்பகுதியில், நிலப்பரப்பில் வளர்க்கக்கூடிய ரகங்களையே பயன்படுத்தி வருகிறோம். சாறு உறிஞ்சும் அசுவினி, காய்ப்புழு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மட்டும் மருந்து தெளிக்க வேண்டியுள்ளது.சாகுபடி காலத்தில், 120 நாட்களில் ஏக்கருக்கு 3 டன் வரை மகசூல் கிடைக்கும். உடுமலை, ஒட்டன்சத்திரம் சந்தைக்கு அவரையை விற்பனைக்கு அனுப்புகிறோம். சாகுபடி செலவு குறைவு என்பதால், இச்சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறோம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி