உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறக்குமதி விதை வேண்டாம்; விவசாயிகள் வலியுறுத்தல்

இறக்குமதி விதை வேண்டாம்; விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர்: 'இறக்குமதி செய்யப்படும் விதைகளை தவிர்த்து, உள்ளூர் விதைகளை ஊக்குவிக்க வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க இயற்கை விவசாய அணி மாநில செயலாளர் வேலுசாமி, வேளாண் இணை இயக்குனருக்கு மனுவில் கூறியுள்ளதாவது:தமிழக வேளாண் துறை சார்பில், மாநிலம் முழுதும், வேளாண்மை துறை சார்பில், அந்தந்த வட்டர வேளாண்மை உதவி இயக்குனர் வழிகாட்டுதலில், விதைச்சான்று அலுவலர்கள் வழிகாட்டுதலுடன், விதைப்பண்ணை அமைக்க ஏற்பாடு செய்வார்கள். அவ்வாறு, விவசாயிகளிடம் இருந்து பெறும் விதையை மற்ற விவசாயிகளுக்கு விதை பயன்பாட்டிற்கு வினியோகம் செய்ய வழங்குவர்.உள்ளூர் வட்டாரத்தில் மற்றும் உள்ளூர் மாவட்டத்தில் விற்பனை செய்தது போக எஞ்சிய விதைகளை தேவைப்படும் வட்டாரங்களுக்கோ, மாவட்டங்களுக்கோ வழங்குவர். ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக உள்ளூர் ரகங்களை தவிர்த்து, தேசிய விதை கழகத்தின் வாயிலாக இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றனர்.உதாரணமாக, கடந்தாண்டு தமிழகம் முழுவதும், நிலக்கடலை பயிர் செய்யும் அனைத்து வட்டாரங்களிலும், அந்தந்த உள்ளூர் ரகங்களை தவிர்த்து, கதிரி லெபாக்ஸி என்ற வெளிமாநில ரக விதைகளை தமிழக வேளாண் துறை, விவசாயிகளிடம் வற்புறுத்தி விற்பனை செய்தது. வரும் நாட்களில் இத்தகைய செயல் தவிர்க்கப்பட்டு, உள்ளூர் ரகங்கள் ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை