உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெரு நாய்களை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

தெரு நாய்களை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர்: வளர்ப்பு ஆடுகளை தெரு நாய்கள் விரட்டி கடிப்பதால் ஏராளமான ஆடுகள் இறக்கின்றன. இறந்த ஆடுகளுக்கு, அதன் உரிமையாளர்கள் பிரேத பரிசோதனை செய்து, பரிசோதனை அறிக்கையை கையில் வைத்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில், அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மட்டுமே உள்ளாட்சி நிர்வாகங்களால் முடியும்; அதற்கு மட்டுமே சட்டத்தில் இடமுண்டு. அவற்றை அழிக்கவோ, அப்புறப்படுத்தவோ முடியாது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தடுமாறுவதால், தெரு நாய்களுக்கான கருத்தடை என்பது, பல இடங்களில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.சில இடங்களில் தன்னார்வ அமைப்பினரின் உதவியுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டாலும், அது, எதிர்பார்த்தளவு பயனளிப்பதாக தெரியவில்லை.அதே நேரம், தெருநாய்களால் தாக்கப்படும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கினால், அதற்காக பெரும் தொகையை செலவிட நேரிடும்.அந்த செலவினத்துக்கு பதில், தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதே மேல் என்ற முடிவுக்கு அரசு வந்தாக வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி