மேலும் செய்திகள்
நெல் கொள்முதல் மையம் விரைவில் திறக்கப்படுமா?
09-Oct-2025
பொங்கலுார்: கடந்த வைகாசி பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர். அறுவடையின் போது போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால், கணிசமான விவசாயிகள் அறுவடை செய்த வெங்காயத்தை திறந்தவெளியில் பட்டறை அமைத்து இருப்பு வைத்தனர். தற்போது அறுவடை சீசன் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் மட்டும் மிகக் குறைந்த அளவு சந்தைக்கு வருகிறது. இனி தேவைக்கு இருப்பு வெங்காயத்தை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கார்த்திகை பட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும். அது அறுவடைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகும். புதிதாக வெங்காயம் நடவு செய்யும் விவசாயிகள் விதைக்காக இருப்பு வெங்காயம் வாங்குவது அதிகரிக்கும். மேலும் அறுவடை கிட்டத்தட்ட முடிந்துள்ளதால் இதன் விலை உயர வாய்ப்பு உள்ளது. தற்போது கிலோ, 50 ரூபாய்க்கு விலை போகிறது. அடுத்த மாதத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சின்ன வெங்காயம் இருப்பு வைத்துள்ள விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
09-Oct-2025