உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பணப்பயிர்கள் பயிரிடத் துவங்கிய விவசாயிகள் :அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் 100 அடியில் நிலத்தடி நீர்

பணப்பயிர்கள் பயிரிடத் துவங்கிய விவசாயிகள் :அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் 100 அடியில் நிலத்தடி நீர்

பெருமாநல்லுார்: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டால், திருப்பூர் ஒன்றிய வடக்கு பகுதியில், 1200 அடி வரை சரிந்திருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது உயர்ந்து நுாறு அடியிலேயே தண்ணீர் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாழை, மஞ்சள், நெல் உள்ளிட்ட பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். திருப்பூர் ஒன்றியத்தின் வடக்கு பகுதியில், விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. போதிய நிலத்தடி நீர் இல்லாததால், விவசாயிகள் கம்பு, சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர் ரகங்களையே பயிரிட்டு வந்தனர். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால், கிராமங்களில் உள்ள அனைத்து குளங்களும் தண்ணீர் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நீர் மட்டம் உயர்வால், தற்போது, விவசாயிகள் வாழை, மஞ்சள், வெங்காயம், சோளம், கம்பு என அனைத்து பயிர்களையும் பயிரிடத் துவங்கியுள்ளனர். நெல் சாகுபடியும் நடக்கிறது. பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையிலும், அதிக தேவை இருப்பதாலும் பெரும்பான்மையான விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: பெருமாநல்லுார் வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம், ஆயிரத்து 200 அடிக்கு கீழ் இருந்தது. அனைத்து பயிர்களை விவசாயம் செய்ய போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. - அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் குளம் அருகில் நுாறு அடியிலும், மற்ற இடங்களில் 200 - 300 அடி ஆழத்திலும் தண்ணீர் கிடைக்கிறது. இதனால் அனைத்து பயிர்களையும் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளோம். தற்போது மஞ்சளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், மஞ்சள் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை