உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் கிடந்த ரூ.1.50 லட்சம் ஒப்படைத்த தந்தை, மகள்

சாலையில் கிடந்த ரூ.1.50 லட்சம் ஒப்படைத்த தந்தை, மகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்; காங்கயத்தில் ரோட்டில் கண்டெடுத்த, 1.50 லட்சம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த தந்தை, மகளின் நேர்மையை போலீசார் பாராட்டினர். திருப்பூர் காங்கயம், களிமேட்டை சேர்ந்தவர் செல்வராஜ், 55; பெயின்டர். இவரது மகள் வித்யா, 28; பட்டதாரி. நேற்று காலை இருவரும் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றபோது, ரோட்டில் பையை கண்டெடுத்தனர். அதில் ஆதார் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது. காங்கயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் இருவரையும் பாராட்டினார். பேக்கரியில் டீ குடிப்பதற்காக வந்த காங்கயத்தை சேர்ந்த காமராஜ், 70 என்பவர் பையை தவற விட்டது தெரிந்தது. அவரிடம் பணத்துடன் பையை போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை