காய்கறி சாகுபடியில் உர மேலாண்மை
உடுமலை, ; உடுமலையில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டுமுழுவதும் பல்வேறு வகையான காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. காய்கறி விளைச்சலுக்கு, செடிகளுக்கு, முறையாக உர மேலாண்மை செய்வது அவசியமாகும். நீர் சிக்கனத்துக்கும், தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்கவும், பெரும்பாலான விவசாயிகள், சொட்டு நீர், நுண்ணீர் பாசன முறைக்கு மாறியுள்ளனர். இந்த பாசன முறையில், செடிகளுக்கு, திரவ உரங்களே பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட் உட்பட சாகுபடிகளில், பிளாஸ்டிக் டிரம்களில், உரங்களை ஊற வைத்து, செடிகளுக்கு, தண்ணீர் பாய்ச்சும் போது, கலந்து விடுகின்றனர். தொடர்ச்சியாக காய்கறி சாகுபடி செய்பவர்கள் தனியாக கட்டமைப்பை ஏற்படுத்தி, திரவ உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.