மண் வளம் காக்கும் தொழு உரம்
திருப்பூர் : மூலனுார், புஞ்சை தலையூரில், விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடி பயிற்சி வழங்கப்பட்டது.தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:தற்போது கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாலும், பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடியும் குறைந்துவிட்டதாலும், மண்ணிற்கு தேவையான அங்கக சத்து கிடைப்பது குறைந்துவிட்டது; மண் வளமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மண் வளத்தை காக்க ஊட்டமேற்றிய தொழு உரமிட பரிந்துரைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை, வேளாண் உதவி இயக்குனர் வசந்தி, வேளாண் அலுவலர் சாந்தி, துணை வேளாண் அலுவலர்கள் சின்னதம்பி, குமார் செய்திருந்தனர்.