மேலும் செய்திகள்
ஆல்கொண்டமால் கோவிலில் ரேக்ளா காளைகளுக்கு பூஜை
02-Jan-2025
உடுமலை: கால்நடை வளம் பெருக, உருவாரங்களை வைத்து, பாலாபிேஷகம் நடத்தி, மக்கள் கூடி வழிபடும், ஆல்கொண்டமால் கோவில் திருவிழா, நாளை நடக்கிறது.உடுமலை அருகே, சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. கால்நடை வளம் பெருகவும், அவற்றின் பிரச்னைகளுக்கு, தீர்வு கிடைக்கவும், இக்கோவிலில், பாலாபிேஷகம் செய்து, உருவாரங்கள் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.திருமால் எழுந்தருளியுள்ள இக்கோவிலில், சுயம்புவாக உருவான லிங்க வடிவ புற்றுக்கு, மாடுகள் தானாக பால் சொரிந்தது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.ஆலம் (விஷம்) உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடிகொண்டதால், அங்குள்ள திருமாலை, 'ஆல்கொண்டமால்' என்று மக்கள் வழிபட துவங்கினர்.சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு, விவசாயிகள் பால், வெண்ணை உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து வழிபடுகின்றனர். இங்கு, வழிபட்டுச்செல்வதால் கால்நடைகள் நோய், நொடியின்றி ஆரோக்கியத்துடன் இருப்பதாக விவசாயிகள் நம்புகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவிலில் நடக்கும், திருவிழாவுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று, காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகத்துடன், சிறப்பு பூஜைகள் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான திருவிழா நாளை நடக்கிறது.பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உடுமலை அரசு போக்குவரத்து கழக கிளையிலிருந்து சிறப்பு பஸ்கள் கோவில் வரை இயக்கப்படுகின்றன. பக்தர்கள் வரிசையாக செல்வதற்கான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.கோவில் செல்லும் வழியிலும், கோவில் மைதானத்திலும், கரும்பு கடைகள், உருவாரங்கள் விற்பனை நிலையங்கள், பக்தர்களின் பொழுதுபோக்குக்கு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கோவில் வளாகம் திருவிழா களைகட்டியுள்ளது.
02-Jan-2025