உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபங்களின் திருவிழா! அருளாசி வழங்கிய ஆன்மிக சான்றோர்கள்; இருளை நீக்க இன்பமாகிய ஒளியை ஏற்றுங்க...

தீபங்களின் திருவிழா! அருளாசி வழங்கிய ஆன்மிக சான்றோர்கள்; இருளை நீக்க இன்பமாகிய ஒளியை ஏற்றுங்க...

'அஞ்ஞானத்தை விலக்கி, அறிவாகிய சுடர் ஒளியாக சுடர்விடும் நாளாகிய (நாளை) தீபாவளி பண்டிகையை தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்,' என, ஆன்மிக சான்றோர் அருளாசி வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு நபரின் வாழ்விலும், தீபாவளி பண்டிகை என்பது, மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கிறது. ஆண்டு முழுவதும் தங்களது கடமைகளை நிறைவேற்ற உழைக்கிறோம். ஆண்டில் ஒரு நாள் மட்டும் தான், இந்தியா முழுவதும், தீபாவளி என்ற பெயரில், இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இருளை நீக்கி இன்பமாக ஒளியை நல்கும் நாளாகிய தீபாவளியே, சிறப்பான பண்டிகை என, பிற மதத்தை சார்ந்தவர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். அவ்வகையில், நாளை வரும் தீபாவளி என்பது, அஞ்ஞானத்தை விலக்கி அறிவுச்சுடராகிய பிரகாசத்தை அருளும் நன்னாளாக இருக்குமென, ஆன்மிக சான்றோர் அருளாசி கூறியுள்ளனர்.---அஞ்ஞானம் விலகட்டும்ஆன்மிகம் தழைக்கட்டும்உலகில் அன்பும், சகோதரத்துவம், மனிதாபிமானம், ஒற்றுமை, வளர்ச்சி ஓங்கவும், அமைதியும், ஸ்திரத்துடன் கூடிய செயல்கள் முன்னேறவும், இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன். தீபாவளி நாளில் அதிக அகல் விளக்குகளை ஏற்றி வைப்பதால், தீப வெளி என்பது, தீபாவளி என்கிறோம்.நம்முள் இருக்கும் இருள் எனும் அஞ்ஞானத்தை விலக்கி, அறிவாகிய சுடரை ஒளிரவிடும் நாளாகும். பூமித்தாயின் புதல்வனாம் நரகாசுரனை அழித்தநாள் என்பதால், அரக்கத்தனத்தை நீக்கி மாசில்லா பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும். பூமியையும், பஞ்ச பூதங்களும், துாய்மையாக வைத்து, தீபாவளியை கொண்டாட வேண்டும்.- காமாட்சிதாச சுவாமிதிருப்புக்கொளியூராதீனம்வாசீகர் மடாலயம், அவிநாசி.---மகிழ்ச்சியுடன்கொண்டாடுவோம்!அனைவருக்கும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்; மக்கள், மகிழ்ச்சிகரமாக கொண்டாட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு குழப்பம், கவலைகள் இருந்தாலும், 'இன்பமும், துன்பமும் இல்லானே உள்ளானே' என்று மாணிக்கவாசகர் கூறியதுபோல், இன்பமும், துன்பமும் மாறிமாறி வருகின்றன. இரண்டும் கலந்து வருவதே, மனித வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும்.ஒன்றுகூடி மகிழ்வுடன் கொண்டாடவே, பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. குழப்பமும், வியாதிகளும் அறவே நீங்க, ஆத்மார்த்தமாக கண்ணீர்விட்டு கதறி, இறைவனின் திருவடியை பிடித்து வழிபட வேண்டும். இறைவன் அனைவரையும் குறையின்றி காப்பான். தீமையை அழித்து, நன்மையை வரவேற்க தீபாவளியை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்!- நடராஜ சுவாமிமுதல்வர், ஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலைமுதல்வர், கூனம்பட்டி திருடம்.----நமக்குள் இருக்கும்நரகாசுரனை அழிப்போம்!உலக மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி எனும் மகிழ்ச்சிக்குரிய நாள், மக்கள் மனநிறைவு கொள்ளும் பெருநாள். தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் கொடுத்த நரகாசுரனை அழித்த நாள் என்பதால், தீபாவளி என்பது தீமையை அழித்து மகிழ்ச்சியை கொண்டாடும் நாள்.தீபாவளி பண்டிகை குறித்து பல்வேறு நம்பிக்கைக்குரிய வரலாறு உண்டு. இருப்பினும், கதைகளாக சொல்லிக் கொண்டிருக்காமல், நமக்குள் இருக்கும் கொலை, களவு, பஞ்சபாதகம், பொய், தீண்டாமை, புலால் உண்ணுதல், மது அருந்துதல், உழைக்காமல் உண்பது, கணவனை அவமதிப்பது, மனைவியை கொடுமை செய்வது, பெற்றோர் சொல் மீறுதல், அதிக உறக்கம் உள்ளிட்ட இன்னும் பல மனித வளர்ச்சிக்கு தீங்கு செய்யும் நரகாசுரன்களை அழித்து, தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.அதிகாலை எழுந்து, எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பிறருக்கு மனிதநேயத்தை காட்டி, நம்மிடம் இருக்கும் இருளை நீக்கி, ஒளி ஏற்றி, மன நிறைவுடன் வாழ இறைவனை வேண்டுவோம். உறவுகளோடு உறவாடி மகிழ்ச்சி பொங்கும் நாளாக இந்த தீபாவளி அமையட்டும்.- பஞ்சலிங்கேஸ்வரர்கோவை காமாட்சிபுரி ஆதீனம்---நன்மையை வரவேற்றுநல்லதை போற்றுவோம்!தீபாவளி திருநாளானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பபடும் மிகச்சிறப்பான திருவிழா. தீபாவளி திருநாளில், தீபங்களை ஏற்றி வைத்து, வடமாநிலங்களில் கொண்டாடுகின்றனர். நரகாசுரனை அழித்த நாள் என்று கதை கூறினாலும், விலகி, நன்மை பெருக வேண்டும் என பட்டாசு வெடித்து, தீயவற்றை அழித்து கொண்டாடுகிறோம். சீக்கியர், சமனர், புத்தமார்களும், இந்நாளை கொண்டாடுகின்றனர். பண்டிகையின் நோக்கமே, தீமையை அழித்து நன்மையை வரவேற்பதுதான்; நாமும் நல்லதை வரவேற்போம்.- சுந்தரராஜ சுவாமிதிருமுருகநாத சுவாமி திருமடம்திருமுருகன்பூண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Palanisamy T
அக் 30, 2024 04:47

ஆன்மீக சான்றோர்கள் மட்டும் நமக்கு ஆசி தந்தாள் போதும் என்று நாம் சும்மா இருத்தல் கூடாது. தமிழக அரசு தமிழர்கள் சார்பாக உலக தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வாழ்த்துக்களை வெளியிடுவார்கள் என நம்புவோம் .சைவ சமயக் கொள்கையென்பது எல்லா உயிருக்கும் பொதுவான கோட்ப்பாடு. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்வதும் தமிழ். எல்லா உயிர்களிலும் இறைவன் குடிக் கொண்டுள்ளான் என்று அன்றுச் சொன்னதும் தமிழ். இப்படி உயர்க் கொள்கைகளையும் கோட்ப்பாடுகளையும் கொண்ட நம் தமிழ் நமக்கு உயிர்தானே தீப திருநாள் சைவ திருநாள். ஆகையால் இனிமேல் இத்திருநாளில் மேலும் தமிழக தலைவர்கள் தீபத் திருநாளுக்கு வாழ்த்து சொல்வார்கள் என நம்புவோம்


Palanisamy T
அக் 30, 2024 04:14

தீபாவளி - தீபவழி என்ற இருவேறுச் சொற்கள். இருந்தாலும் நமக்கு கேட்பதற்கு வேறாக தெரியவல்லை. இத் திருநாள் தீபங்களால் அலங்கரிக்கப் பட்ட வழியென்றும் அதனால் இருளை வெற்றிக் கொண்ட நாளென்றும் அன்று பள்ளிப் பாடத்தில் படித்தேன். Deepavali is lighted path, a day of victory of light over darkness - . இன்று உலகமே இத் திருநாளை இருளை வெற்றிக் கொண்ட நாள் - இருள்நீக்கி இன்பம்தரும் நாள் என்று ஏற்றுக் கொண்டுள்ளது தமிழர்களாகிய நாம் இத்திருநாளை மற்ற சமய விழாக்களாக கொண்டாட வேண்டும். அப்படிக் கொண்டாடுகின்றோமா என்பது தான் இன்றைய நிலை மற்ற சமய விழாக்களில் நாம் குடிப்பதில்லை, புலால் உணவுகள் உண்பதில்லை, ஏன் இத்திருநாளில் மட்டும் இம் மாறுபட்ட நிலை. நவாத்திரி தொடங்கி தைமாதம் வரை நாம் கொண்டாடுவதெல்லாம் சைவ சமய விழாக்கள். ஏன் இத் திரு நாளை மட்டும் இப்படி கொண்டாடுகின்றோம். எங்கோ ஏதோவொரு தவறு நடந்துள்ளது இனிவருங் காலங்களில் இனிமேலாவது நாம் நம்மை கொஞ்சமாக மாற்றிக் கொள்ளவேண்டும் . இதுதான் நமக்கும் நாளைய நம் சந்நதியினருக்கும் நல்லது .இத்திருநாளை நாம் இனிமேல் மாசுப் படுத்த வேண்டாம். நாம் குடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் நிறைய மற்ற நாட்களுள்ளன . இனிமேலாவது நம் சமயத்தின் புனிதத்தைக் காப்போம் சைவத்தைப் போற்றுவோம் .


முக்கிய வீடியோ