போலியோ தடுப்புக்கு நிதி பங்களிப்பு
உடுமலை; உடுமலை பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் போலியோ நோய்த்தடுப்பு பணிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் கிளப் சார்பில், பள்ளி வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சதுரங்க விளையாட்டு ஆசிரியர் சந்திரசேகரன் இசைக்கச்சேரி நடத்தப்பட்டு, அதில் நுழைவு கட்டணமாக பெறப்பட்ட தொகை, போலியோ நோய்த்தடுப்பு பணிகளுக்கு மாணவர்கள் பங்களிப்பாக வழங்கப்பட்டது. இதில், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.