மேலும் செய்திகள்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ
26-May-2025
அவிநாசி, ;அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, ரங்கா நகரில், தங்கராஜ் 45, என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரவை மற்றும் நுால் மில் உள்ளது.நேற்றிரவு, பஞ்சு குடோனில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. மளமளவென்று தீ பரவியது. இதனால், ஊழியர்கள் உடன டியாக வெளியேறினர். அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், வீரர்கள் விரைந்து சென்று, தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.இருப்பினும், தீ மளமளவென பற்றி, அருகில் இருந்த நுால் பேல்களில் பற்றியது. இதனால், திருப்பூர் வடக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாவட்ட தீத்தடுப்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் தலைமையில், வடக்கு தீயணைப்பு வீரர்களும் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஏறத்தாழ, நான்கு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மற்றும் நுால் பேல்கள் எரிந்து சேதமானது.
26-May-2025