உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எலக்ட்ரிக்கல் கடையில் தீ; பொருட்கள் நாசம்

எலக்ட்ரிக்கல் கடையில் தீ; பொருட்கள் நாசம்

உடுமலை ; உடுமலை அருகே, மின் சாதனங்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசனமானது.உடுமலை அருகேயுள்ள பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சியில், பாபு என்பவருக்கு சொந்தமான பரணி ஜோதி ஹார்டு வேர், எலக்ட்ரிக்கல், பெயின்ட் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை உள்ளது.நேற்று முன்தினம் இரவு, இக்கடை திடீரென தீ பிடித்து, எரிந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி