உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வர்த்தக நிறுவன குடோனில் தீ

வர்த்தக நிறுவன குடோனில் தீ

திருப்பூர்; திருப்பூரில் ஆன்லைன் வர்த்தக நிறுவன குடோன் மற்றும் பேப்பர் குடோன் என, இரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. திருப்பூர், வீரபாண்டியை சேர்ந்தவர் ஜெகதீஷ், 37. இவர் கருப்பகவுண்டம்பாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றார். பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பனியன்களை அனுப்பி வருகிறார். நேற்று மதியம், நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து இடத்துக்கும் தீ பரவி எரிய ஆரம்பித்த காரணத்தால், தீயை கட்டுக்குள் கொண்டு வர தாமதம் ஏற்பட்டது. இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து, வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர். பேப்பர் குடோனில் தீ திருப்பூர், குமரானந்தபுரம், கோட்டை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா, 49. இவர் நல்லாத்துப்பாளையம் முருகன் நகரில் பேப்பர் குடோன் நடத்தி வந்தார். உணவு மேஜைக்கு பயன்படுத்தும் பேப்பர் ரோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மதியம் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அனைத்து இடத்துக்கு தீ பரவியது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் எரிந்து சேதமானது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி