தண்டவாளம் அருகே தீ
திருப்பூர்; திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் தண்டவாளம் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைக்கு மர்ம நபர்கள் நேற்று மாலை தீ வைத்து சென்றனர். அங்கிருந்த குப்பை முழுவதும் பரவி தீ எரிய ஆரம்பித்தது. இதன் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.தகவலறிந்து சென்ற திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கொட்டி கிடந்த குப்பைக்கு போதை ஆசாமிகள் யாராவது தீ வைத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணைத்த காரணத்தால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.