உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறை தீர் கூட்டங்களில் முதல் நிலை அதிகாரிகள் பங்கேற்க எதிர்பார்ப்பு

குறை தீர் கூட்டங்களில் முதல் நிலை அதிகாரிகள் பங்கேற்க எதிர்பார்ப்பு

- நமது நிருபர் -''குறைகேட்பு கூட்டங்களில் எழுப்பும் கேள்விகளுக்கு, அதிகாரிகளிடம் இருந்து பதில்கள் கிடைப்பதில்லை. ஒருவேளை பதில்கள் கிடைத்தாலும், அவை நிறைவற்ற பதில்களாக உள்ளன'' என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.திருப்பூரில், கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், அந்தந்த ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் கோட்ட அளவிலும், விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இம்மாதம், மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை, கலெக்டரிடம் நேரடியாக மனுவாக அளிக்கலாம்.கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலை, வனத்துறை, நீர்வளம், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை மாசுகட்டுப்பாடு வாரியம் உள்பட அனைத்து அரசு துறை சார்ந்த, மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.ஆனால், பெரும்பாலான துறைகளில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அலுவலர்களே குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.அதனால், குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பும் கேள்விகள், பிரச்னைகளுக்கு, அரசு அலுவலர்களால், தீர்க்கமான மற் றும் சரியான பதிலளிக்க முடியாமல் போகிறது. பல நேரங்களில், விவசாயிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அலுவலர்கள் திணறுகின்றனர். மாவட்ட அளவில் முதல்நிலை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்பது விவசாய சங்கங்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ