உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நாய் கடித்து குதறி ஐந்து ஆடுகள் பலி

 நாய் கடித்து குதறி ஐந்து ஆடுகள் பலி

காங்கயம்: காங்கயத்தில் வெறி நாய்கள் கடித்ததில், ஐந்து ஆடுகள் இறந்தது. திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாப்பினி ஊராட்சிக்கு உட்பட்ட வரதப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா, 60, விவசாயி. நேற்று முன்தினம், 30 செம்மறி ஆடுகளை வழக்கம் போல் இரவு பட்டிக்குள் அடைத்துவிட்டு சென்றார். பட்டிக்குள் புகுந்த வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது. மூன்று பெரிய செம்மறி ஆடு, இரண்டு குட்டி இறந்தன. எட்டு ஆடுகள் படுகாயமடைந்தது. இதனையடுத்து, தகவலின் பேரில், வருவாய்த்துறை, காங்கயம் போலீசார் சென்று விசாரித்தனர். தொடர்ந்து நாய்கள் ஆடுகளை கடித்து கொன்று வருவது தொடர்கதையாக உள்ளது. நாய்களை கட்டுப்டுத்தவும், இறந்த ஆடுகளுக்கு உடனடியாகநடவடிக்கை நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ