உள்ளூர் செய்திகள்

கல்வி மலர்...

''எங்களிடம் பயிலும் மாணவர்களின் ஒழுக்கம், கல்வித்தரம் தான், எம் பள்ளிக்கான தரச்சான்று'' என்கிறார், கொடுவாய் மெரிட் பள்ளி தாளாளர் கவுதமன்.இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:இயற்கையான, மாசற்ற சூழலில் பிரி-கேஜி முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பள்ளி வளாகத்தில் மரம், செடி, கொடிகள் இருப்பதால், பசுமை மற்றும் குளிர்ச்சியான சூழலில் நிலவுகிறது. நீட், ஜெஇஇ., போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.தற்போது வரை இப்பள்ளி, 10 மருத்துவர்கள், எண்ணற்ற பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. பட்டய கணக்காளர் படிப்பிற்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். இரு பட்டய கணக்கர்களை இதுவரை இப்பள்ளி உருவாக்கியுள்ளது.கூடைப்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, பீச் வாலிபால், த்ரோ பால் விளையாட்டுகளில் எம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளனர்.மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் விளையாட்டுத்திறன் ஊக்குவிக்கப்படுகிறது.பேச்சுக்கலை, அறிவியல், செயல்பாட்டுக்கலை, நடனம், இசை, வில் வித்தை, ஸ்கேட்டிங், சிலம்பம், கராத்தே, யோகாசனம் பயிற்றுவிக்கப்படுகிறது.வெறும் ஏட்டுக்கல்வியுடன் அல்லாமல் நேரம் தவறாமை, தலைமைப்பண்பு, ஆரோக்கி உணவு, சுத்தம் மற்றும் சுகாதாரம், சமுதாய உணர்வு உள்ளிட்ட ஒழுக்க நெறிகள், கற்றுக் கொடுக்கப்படுகின்றன. எங்கள் பள்ளியில் பயின்று வெளியேறும் மாணவர்களின் ஒழுக்கம், கல்வித்தரமுமே இதற்கான தரச்சான்று.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறோம்.பள்ளி தலைவர் பெரியசாமி, பள்ளி நிர்வாக அலுவலர் வான்மதி, பள்ளி முதல்வர் ஆனந்தி மற்றும் பள்ளி தாளாளரின் நேரடி கண்காணிப்பில் பள்ளி திறம்பட செயல்பட்டு வருகிறது.பிரிகேஜி துவங்கி, 2024 - 2025ம் ஆண்டுக்கான விஜயதசமி அட்மிஷன் நடந்து வருகிறது. தொடர்புக்கு: 63825 47130.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை