உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நம்பர் பிளேட் இன்றி பறக்கும் வாகனங்கள்

நம்பர் பிளேட் இன்றி பறக்கும் வாகனங்கள்

திருப்பூர் திருப்பூரின் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில், நம்பர் பிளேட் இல்லாமல், டிராக்டர், மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் இயங்குகின்றன.இவற்றில் காய்கறி, வைக்கோல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்கள் மற்றும் கட்டட கழிவு உள்ளிட்டவற்றை ஏற்றி செல்கின்றனர். பொதுவாக, பொருட்களின் மீது வலை விரித்து, பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. விவசாய பயன்பாடு என்ற பெயரில் வர்த்தக ரீதியாக கட்டட கழிவுகள் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதி வேகத்திலும், பாதுகாப்பு விதிமுறை மீறியும் இயக்கப் படுகின்றன.கட்டட கழிவுகளை திறந்த நிலையில் எடுத்துச் செல்வதால் கிளம்பும் புழுதி பின் தொடரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனச்சிதறல் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ