அமராவதி அன்னை சிலை அமைக்க கால்கோள் விழா
திருப்பூர்; தாராபுரம், மூலனுார், முளையாம்பூண்டி அமராவதி ஆற்று படித்துறையில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், முத்துசாமி கோவில் அறக்கட்டளை தலைவருமான பத்மநாபன் தலைமை வகித்தார். ஞானசம்பந்த ஓதுவாமூர்த்திகள் ஆரத்தி வழிபாட்டை நடத்தினார். ஆற்றங்கரையில் மக்கள் தினமும் வழிபடும் படியாக, அமராவதி அன்னை சிலை அமைக்க கால்கோள் விழா நடந்தது. அமராவதி ஆற்றங்கரையில் அமைக்கப்படும் முதல் சிலை இதுவேயாகும். மூலனுார் ஒன்றிய துணைத்தலைவர்பழனிசாமி, பேரூராட்சி தலைவர் தண்டபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் செல்வரசி உட்பட பலர் பங்கேற்றனர். வெள்ளகோவில் சிவனடியார் பெருமாள் சிவம் குழுவினரின் கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. வழிபாட்டுக்கு வந்த அனைவருக்கும் புதுப்பை ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பரிமளம் நன்றி கூறினார்.