உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அரசுப்பள்ளிக்கு அறக்கட்டளை உதவி

 அரசுப்பள்ளிக்கு அறக்கட்டளை உதவி

திருப்பூர்: திருப்பூர், குமார் நகரிலுள்ள அரசு நகரவை மேல்நிலைப்பள்ளியில், 1,576 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளிக்கு அடிப்படை வசதியான டேபிள், பெஞ்ச் தேவைப்பட்டது. இதையறிந்த சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் பள்ளி வகுப்பறைக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 டேபிள் மற்றும் பெஞ்ச் நேற்று குழந்தைகள் தினத்தில் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநகராட்சி, 23வது வார்டு கவுன்சிலர் துளசிமணி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கருப்பையா நன்றி கூறினார். சிகரங்கள் அறக்கட்டளையின் தலைவர் காமராஜர், உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி