உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரியில் நாற்பெரும் விழா

அரசு கல்லுாரியில் நாற்பெரும் விழா

அவிநாசி: அவிநாசி அரசு கல்லுாரியில் மூன்றாவது பட்ட மளிப்பு விழா, ஆண்டு விழா, நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய நாற்பெரும் விழா நடைபெற்றது.விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். கடந்த 2022 - 23 மற்றும் 2023- - 24ம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த, 282 மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் கோவை பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சான்றிதழ் வழங்கினார். இதில் ஆங்கிலம் - 37, வேதியியல் - 18, வணிக நிர்வாகவியல் - 54, வணிகவியல் - 59, கணினி அறிவியல் - 29, பொருளியல் - 47, பன்னாட்டு வணிகவியல் துறை - 38 என மொத்தம் 282 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.இவர்களில், வணிக நிர்வாகவியல் துறையை சேர்ந்த, ஐந்து மாணவர்கள் பாரதியார் பல்கலை தர வரிசையில் இடம் பெற்றனர். நாற்பெரும் விழாவில் கல்லுாரியின் துறை தலைவர்கள் ஷகிலா பானு, புவனேஸ்வரி, அருண், பாலமுருகன், தாரணி, ஹேமலதா, முகுந்தன் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை