உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச தடகள பயற்சி முகாம் அரசுக்கல்லுாரியில் துவக்கம்

இலவச தடகள பயற்சி முகாம் அரசுக்கல்லுாரியில் துவக்கம்

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் இலவச தடகள பயிற்சி முகாம் துவங்கியது.திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான இலவச தடகள பயிற்சி முகாம் நேற்றுமுன்தினம் துவங்கியது.இம்முகாம், மே இறுதி வரை நடக்கிறது. துவக்க விழாவில் திருப்பூர் தடகள சங்கத்தலைவர் சண்முகசுந்தரம், கல்லுாரி முதல்வர் கல்யாணி, தடகள சங்க செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தடகள சங்க பயிற்சியாளர் அழகேசன், மாணவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார். விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள் உட்பட நுாற்றுக்கும் அதிகமானவர்கள் விழாவில் பங்கேற்றனர்.ஆறு முதல் 25 வயது வரை உள்ளவர்கள், இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். தற்போது, 80 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. முகாமிற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி உடற்கல்வி துறையினர் மற்றும் தடகள பயிற்சி மைய பயிற்சியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை